சூப்பர்நோவாஸ் அணி வெற்றி

சூப்பர்நோவாஸ் அணி வெற்றி

1 mins read

ஜெய்ப்பூர்: பெண்கள் பிரிமியர் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று அணிகளுக்கு இடையே 'டி20' சேலஞ்ச் தொடர் ஜெய்ப்பூரில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் மிதாலி ராஜின் வெலாசிட்டி அணியும் ஹர்மன்பிரீத் கௌரின் சூப்பர்நோவாஸ் அணியும் மோதின.

முதலில் பந்தடித்த வெலாசிட்டி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சூப்பர்நோவாஸ் அணித் தலைவி ஹர்மன்பிரீத் கௌர் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ராதா பவுண்டரிக்கு விரட்ட, சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து வென்றது.