நியூஜெர்சி: ஜெர்மானிய லீக் காற்பந்து ஆட்டமொன்றில் பயர்ன் மியூனிக் வெற்றி பெறாத நிலையில், பட்டம் வெல்வதற் கான போட்டி கடுமையாகி உள் ளது. பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் பயர்ன், நேற்று லெப்ஸிக் குழுவிற்கு எதிராக விளையாடியது. ஆட்டத்தின் பெரும்பாதி நேரம் பயர்ன் ஆதிக்கம் செலுத் தினாலும் எதிரணி மண்ணில் கோல் போட முடியாமல் திணறி யது. முற்பாதி ஆட்டத்தில் கோல் போடக் கிடைத்த அருமையான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் முன்னாள் ஆர்சனல் வீரர் செர்ஜி கனபரி. அதே போல் பிற்பாதி ஆட் டத்தில், பயர்ன் வீரர் ஒருவர் போட்ட கோலை 'ஆப்சைட்' என்று நடுவர் நிராகரித்தார். இதற்கிடையே எதிரணியும் கோல் எதுவும் போடாத நிலை யில், ஆட்டம் சமநிலை கண் டது. இப்போட்டியில் ஒருவேளை பயர்ன் வெற்றி பெற்றிருந்தால், தொடர்ந்து ஏழாவது முறையாக ஜெர்மானிய லீக் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கும். இதற்கிடையே பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பொருசியா டோர்ட்மண்ட் 3-2 என்ற கோல் கணக்கில், டுல்ஸ் டோர்ஃப் அணியை வென்றது. இதனால் புள்ளிகள் இடை வெளி இரண்டாகக் குறைந்து, முதலிடத்திற்கான போட்டி மேலும் கடுமையாகி உள்ளது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. அடுத்த வார இறுதியில் நடை பெற உள்ள கடைசி போட்டியை பயர்ன் மியூனிக் குழு சமன் செய்தால்கூட, கோல் வித்தியாசத் தின் அடிப்படையில் புண்டஸ்லீகா பட்டத்தை அந்தக் குழு கைப்பற்றி விடும்.
லெப்ஸிக் குழு வீரர் கோனார்ட் லைமருக்கு உதவுகிறார் பயர்ன் மியூனிக்கின் ரெனட்டோ சான்செஸ் (இடது). படம்: இபிஏ

