சௌத்ஹேம்டன்: மலை போன்ற இலக்கை எதிர்த்துச் சளைக்காமல் விளையாடினாலும் இங்கிலாந்தி டம் 12 ஓட்டங்களில் வெற்றியைப் பறிகொடுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
ஐந்துப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடு வதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது பாகிஸ்தான் அணி.
இதன் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், நேற்று முன் தினம் இரண்டாவது போட்டி சௌத்ஹேம்டனில் நடைபெற்றது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் சதம் விளாச, மேலும் மூவர் அரைசதம் அடிக்க, அந்த அணி 50 ஓவர் களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ஓட்டங்கள் சேர்த்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேரிஸ்டாவ் (51), ஜேஸன் ராய் (87), ரூட் (40) ஆகியோர் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க அதை நடுவரிசையில் வந்த மோர்கனும் ஜோஸ் பட்லர் 110 ஓட்டங்கள் சேர்த்து வலு வான நிலையை எட்ட துணை செய்தனர்.
அதிலும் 32 பந்துகளில் அரை சதம் அடித்த பட்லர், 50 பந்தில் 100 ஓட்டங்களை எட்டினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 பந்தில் பட்லர் சதம் அடித்திருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இங்கிலாந்தின் அதி வேக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஏற்கெனவே தன் வசப்படுத்தியிருந்த பட்லர், தற் போது இரண்டாவது இடத்தையும் தனதாக்கியுள்ளார்.
வெற்றிக்கு 374 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து சளைக்காமல் விளையாடிய பாகிஸ் தான் வீரர்கள் இங்கிலாந்து அணிக்குச் சரியான போட்டி கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியிலும் ஒரு வர் சதம், இருவர் அரைசதம் விளாசினர். 84 பந்தில் சதமடித்த பக்கர் ஜமான் 138 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பாபர் ஆசம் 51, ஆசிப் அலி 51 ஓட்டங்கள் எடுத்தது அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயரச் செய்தது.
நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் இமாத் வாசிம் (8), பஹீம் அஷ்ரப் (3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 12 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.அதிவேக சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்கு ஏற்கெனவே சொந்தக்காரரான ஜோஸ் பட்லர், இப்போட்டியில் இரண்டாவது இடத்தையும் தனதாக்கினார். படம்: இணையம்

