லிவர்பூலின் நெருக்குதல் சிட்டியிடம் பலிக்கவில்லை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி தக்க வைத்துக்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அதனுடைய இறுதி லீக் ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் பிரைட்டனை அது பந்தாடியது.

ஆட்டத்தின் முதல் கோலை பிரைட்டன் போட்டும் சிட்டியின் வெற்றியை அதனால் தடுக்க முடியவில்லை.

இதன் வெற்றியின் விளைவாக லீக் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை சிட்டி பிடித்தது.

மற்றோர் ஆட்டத்தில் உல்வ்ஸ் குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியது.

இருப்பினும், பிரைட்டனை சிட்டி தோற்கடித்ததால் லிவர் பூலால் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

சிட்டியைவிட அது ஒரு புள்ளி குறைவாகப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை வெல்ல தாம் மிகவும் சிரமப்பட்டதாக சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

இத்தகைய கடுமையான சவாலை தாம் இதற்கு முன் எதிர்கொண்டதில்லை என்றார் அவர்.

"நாங்கள் கடுமையாக உழைத்தோம். லிவர்பூலுக்கு நான் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தாக வேண்டும். அவர்கள் எங்களுக்கு நெருக்குதல் அளித்ததால் நாங் கள் கடந்த பருவத்தைவிட சிறப் பாக விளையாடினோம்.

பட்டத்தை வெல்ல நாங்கள் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களை வெல்ல வேண்டியிருந்தது. லிவர் பூல் எங்களுக்கு அளித்த கடுமை யான போட்டி எங்களை விழிப்புடன் செயல்பட வைத்தது.

"இந்த பருவம்தான் எனக்கு மிகுந்த சவால்மிக்க பருவமாக இருந்தது.

"அடுத்த பருவம் இன்னும் சவால்மிக்கதாக இருக்கும். ஆனால் நாங்களும் கூடுதல் வலிமையுடன் இருப்போம்," என்று கார்டியோலா கூறினார்.

இதற்கிடையே, எவ்வளவு போராடியும் லீக் பட்டத்தை வெல்ல முடியாமல் லிவர்பூல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

ஆனாலும் தமது ஆட்டக்காரர்களின் முனைப்பையும் செயல்பாட்டையும் அக்குழு வின் நிர்வாகி யர்கன் கிளோப் பாராட்டி உள்ளார்.

"இதற்கு மேல் எங்களால் ஏதும் செய்திருக்க முடியாது. சில நேரங்களில் அதிர்ஷடம் சிட்டிக்குக் கைகொடுத்தது. சில நேரங்களில் எங்களுக்கு உதவியது. இறுதி வரை இரு குழுக்களும் கடுமையாகப் போட்டியிட்டோம்.

"சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. அதில் கிண்ணத்தை ஏந்த எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம்," என்றார் கிளோப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!