சென்னையை வீழ்த்தி கிண்ணம் வென்ற மும்பை

சென்னையை வீழ்த்தி கிண்ணம் வென்ற மும்பை

2 mins read

ஹைதராபாத்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஓர் ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று நான்காவது முறையாக கிண்ணத்தை வென்றது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக கிரிக்கெட் மை தானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பந்தடித்தது.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

பொல்லார்டு 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், 3 சிக்சர் களுடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.

வாட்சன், டு பிளஸ்ஸி ஜோடி அதிரடியாக விளையாடினர்.

டு பிளஸ்ஸி 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டம்பிங் என்ற முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ஓட்டங்களிலும் ராயுடு ஓர் ஓட்டத்திலும் டோனி 2 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16வது ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவர்களில் 108 ஓட்டங்கள் குவித்தது.

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

குருணால் பாண்டியா வீசிய 17வது ஓவரில் வாட்சன் 3 சிக்சர்களை விளாசினார்.

இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டன.

கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 4வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார்.

இதனால் கடைசி 2 பந்து களுக்கு 4 ஓட்டங்கள் தேவைப் பட்டன.

ஷர்துல் தாகூர் 2 ஓட்டங் கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட போது ஷர்துல் தாகூர் ஆட்டமிழந் தார்.

இதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் அணி ஓர் ஓட்ட வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.