தெக்வாண்டோ சம்மேளன நிர்வாகி விலகல்

சிங்கப்பூர்: தெக்வாண்டோ சம் மேளனத்தின் பொது நிர்வாகி யாக பதவி வகித்த திரு லிம் தியோங் சின், நேற்று முன் தினம் பதவி விலகியது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2005, பிப்ரவரி 3ஆம் தேதி சம்மேளனத்தின் பொது நிர்வாகியாக பதவி ஏற்றார். திரு லிம்மின் பதவி விலகலை நேற்று தேசிய விளையாட்டுச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் செபஸ்டியன் லீ உறுதிசெய்தார். சம்மேளனத்தைப் புதிய பாதையில் இட்டுச்செல்ல வழி விடும் நோக்கில் அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.