பிரைட்டன் நிர்வாகி பதவி நீக்கம்

லண்டன்: கடந்த ஞாயிறு நடந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன் குழு மான்செஸ்டர் சிட்டியிடம் 4=1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. லீக் பட்டியலில் 17வது இடத்தில் ஏமாற்றத்துடன் முடிந்த இங்கி‌லி‌ஷ் பிரிமியர் லீக் பருவத்திலிருந்து மீண்டு வருவோம் என்று ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் சொன்ன பிரைட்டன் அண்ட் ஹாவ் அல்­பியன் நிர்வாகியான கிரிஸ் ஹியூட்டனின் கதை அதோடு முடிந்தது.

மறுநாள் அவரை பிரைட்டன் குழு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தது.

பிரைட்டன் குழுவை 'எஃப்ஏ' கிண்ண அரை இறுதிச் சுற்று வரை கொண்டு சென்ற ஹியூட்டனால் தமது வேலையைக் காப்பாற்றிக்கொள்ள இயலவில்லை. கடந்த 23 இங்கிலி‌ஷ் பிரிமியர் ஆட்டங்களில், மூன்று முறை மட்டுமே பிரைட்டன் குழு வென்றது.

"நான் இதுவரை எடுத்த முடிவுகளில் இதுவே மிகவும் கடினமானது. லீக்கின் இரண்டாம் பாதியில் பிரைட்டன் குழு மிகச் சிரமப்பட்டதால் நிர்வாகியை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார் பிரைட்டன் குழு தலைவர் டானி புலும்.

இந்த லீக் பருவத்தில் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏழாவது நிர்வாகியாக கிரிஸ் ஹியூட்டன் இடம்பெறுகிறார். சுவான்சீ காற்பந்துக் குழுவின் நிர்வாகியான கிரஹாம் போட்டர் பிரைட்டன் குழுவின் புதிய நிர்வாகியாகத் தேர்வுசெய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!