விட்டதைப் பிடிப்பேன்: அனைத்துலக முதல் பெண் ஆட்ட நடுவர் லட்சுமி

விட்டதைப் பிடிப்பேன்: அனைத்துலக முதல் பெண் ஆட்ட நடுவர் லட்சுமி

1 mins read
d9e54db3-d25a-4f17-8b0b-d9a8c3bead19
-

புதுடெல்லி: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) ஆட்ட நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார் இந்தியாவின் ஜி.சுவர்ணலட்சுமி, 50 (படம்). ரயில்வே, ஆந்திரா, பீகார் அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளில் ஆல்ரவுண்டராக விளையாடி இருக்கும் இவர், "நடுவராக நியமிக்கப் படுவேன் என எதிர்பார்க்கவில்லை," என்றார்.

இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை என்ற வருத்தம் இருப்பதாகக் குறிப்பிட்ட இவர், இருந்தாலும் ஒரு வீராங்கனையாக சாதிக்க முடியாததை ஆட்ட நடுவராக இருந்து சாதிப்பேன் என்றும் சொன்னார்.