எளிதாக வென்றது இங்கிலாந்து

எளிதாக வென்றது இங்கிலாந்து

1 mins read
bd7e7ba4-c1fa-4dcc-93c9-48fe19ed34ca
பேர்ஸ்டோ -

பிரிஸ்டல்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 359 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தபோதும் 31 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒரே ஒரு டி20 போட்டியில் தோற்றுப் போனது. அதையடுத்து, மழை காரணமாக முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட, 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த 3வது போட்டியில் முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்களைக் குவித்தது. 151 ஓட்டங்களை விளா சிய இமாம் உல் ஹக், ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதி ராக அதிக ஓட்டங்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 93 பந்துகளில் 128 ஓட்டங்களை விளாச, அந்த அணி ஆறு விக்கெட் வித்தி யாசத்தில் வென்றது. 4வது போட்டி நாட்டிங்ஹமில் நாளை நடக்கிறது.