இபிஎல் வாய்ப்பை நெருங்கும் ஆஸ்டன் வில்லா

இபிஎல் வாய்ப்பை நெருங்கும் ஆஸ்டன் வில்லா

1 mins read

லண்டன்: இரண்டு பருவங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நுழையும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட நெருங்கி இருக்கிறது ஆஸ்டன் வில்லா காற்பந்துக் குழு.

நார்விச் சிட்டி, ஷெஃபீல்டு யுனைடெட் ஆகிய இரு குழுக்கள் ஏற்கெனவே அடுத்த பருவ இபிஎல்லில் விளையாடத் தகுதிபெற்று விட்ட நிலையில், எஞ்சியுள்ள ஓர் இடத்தைப் பிடிக்க ஆஸ்டன் வில்லா, வெஸ்ட் புரோம்விச், டார்பி கவுன்டி, லீட்ஸ் யுனைடெட் ஆகிய குழுக்களிடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஆஸ்டன் வில்லாவிடம் 4-3 என பெனால்டி வாய்ப்புகளில் தோல்வி கண்டு அவ்வாய்ப்பை நழுவவிட்டது வெஸ்ட் புரோம். அடுத்ததாக, டார்பி-லீட்ஸ் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் குழு, 'பிளே ஆஃப்' இறுதிப் போட்டியில் ஆஸ்டன் வில்லாவுடன் மோதும்.