நான்கு அணிகள் பொருதும் மெர்லயன் கிண்ண காற்பந்து

‘மினி’ தென்கிழக்காசிய விளை யாட்டு காற்பந்துப் போட்டிகள் எனச் சொல்லும்விதமாக, சிங்கப் பூரின் பிரபலமான மெர்லயன் கிண்ணக் காற்பந்துப் போட்டி களுக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது.  

சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப் பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளின் 22 வயதுக்குட்பட்ட காற்பந்துக் குழுக்கள் மோதும் மெர்லயன் கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் 7-9 தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கவிருக்கின்றன. அனைத்துப் போட்டிகளும் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடை பெறும்.

இம்மாதம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிலிப்பீன்சில் நடை பெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மெர்லயன் கிண்ணப் போட்டிகள் நல்ல ஆயத்தக் களமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ‘யங் லயன்ஸ்’ குழுவின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது, “சிங்கப்பூரில் காற்பந்துக் குப் புத்துயிரூட்ட வேண்டியது அவசியம். அந்த வகையில், இளம் வீரர்கள் அனைத்துலகக் காற்பந்து அனுபவத்தைப் பெறுவதற்கு மெர்லயன் கிண்ணப் போட்டிகள் நல்லதொரு வாய்ப்பாக அமையும்,” என்றார்.

நான்கு அணிகளும் ஒன்றுக் கொன்று சளைத்தவை அல்ல எனக் குறிப்பிட்ட திரு ஃபாண்டி, எந்த ஓர் எதிரணியைக் கண்டும் சிங்கப்பூர்க் குழு பயப்படவில்லை என்றும் சொன்னார்.

நன்றாக ஆயத்தமாவதுடன் சொந்த ரசிகர்களின் ஆதரவும் இருப்பதால், 23 வயதுக்குட்பட் டோருக்கான ஆசிய காற்பந்துச் சம்மேளன வெற்றியாளர் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டங்களைப்போல மெர்லயன் கிண்ணப் போட்டிகளி லும் சிறப்பானதொரு செயல் பாட்டை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்புகிறார்.

மெர்லயன் கிண்ணப் போட்டி கள் இனி ஆண்டுதோறும் நடத் தப்படும் என்றார் சிங்கப்பூர் காற் பந்துச் சங்கத்தின் தலைவர் லிம் கியா தோங். அதே நேரத்தில், தேசிய அணிகள் மோதுமா அல்லது குறிப்பிட்ட வயது வரம் புக்குட்பட்ட அணிகள் மோதுமா என்பது தேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 7ஆம் தேதி நடக்கும் ஆட்டங்களில் சிங்கப்பூர், பிலிப் பீன்சுடனும் தாய்லாந்து, இந்தோ னீசியாவுடனும் மோதும். மூன்றாம் இடத்திற்கான போட்டியும் இறுதிப் போட்டியும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும்.

மெர்லயன் கிண்ணப் போட்டி கள் இதற்குமுன் 1982 முதல் 1986 வரை ஆண்டுதோறும், அதன்பின்னர் 1992, 2009ஆம் ஆண்டுகளில் தலா ஒருமுறையும் நடத்தப்பட்டன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon