ஆகச் சிறந்த ஆட்டக்காரர் ஃபிஜியின் ராய் கிருஷ்ணா

சிட்னி: ஆஸ்திரேலிய லீக் காற்பந்துப் போட்டியின் ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருதையும் ஆக அதிக கோல்களைப் போட்ட ஆட்டக்காரருக்கான விருதையும் வெல்லிங்டன் ஃபீனிக்ஸ் குழு வின் ராய் கிருஷ்ணா தட்டிச் சென்றுள்ளார்.

தாக்குதல் ஆட்டக்காரரான 31 வயது ராய் கிருஷ்ணா, ஃபிஜியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர்.

ஃபிஜியின் தேசிய காற்பந்துக் குழுவுக்காகக் களமிறங்கும் ராய் கிருஷ்ணா ஆஸ்திரேலிய லீக் காற்பந்துப் போட்டியில் நியூசி லாந்தின் வெல்லிங்டன் ஃபீனிக்ஸ் குழுவுக்காக விளையாடுகிறார்.

இந்தப் பருவத்தில் ஆஸ்தி ரேலிய லீக் பட்டியலில் வெல் லிங்டன் ஃபீனிக்ஸ் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

போட்டியின் ஆகச் சிறந்த ஆட்டக்காரருக்கான ஜான் வாரன் விருது ராய் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, மற்ற வீரர்களைவிட அதிக கோல்கள் போட்டதால் (18 கோல்கள்) அவருக்குத் தங்கக் காலணி விருதும் வழங்கப்பட்டது.

"இப்படி ஒரு பெருமை தங்களுக்கும் ஒருநாள் கிடைக்கும் என்று கனவு காணும் ஃபிஜி தீவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த விருதுகளைச் சமர்ப்பிக் கிறேன்," என்று விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு உணர்ச்சி மல்க தெரிவித்தார் ராய் கிருஷ்ணா.

ஃபிஜியில் ரக்பிதான் ஆகப் பிரபலமான விளையாட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பியில் முத்திரை பதிக்க ராய் கிருஷ்ணா முயன்றுகொண்டிருந்தபோது காற் பந்து விளையாடுமாறு அவரது பெற்றோர் ஊக்குவித்தனர்.

"நம்மைச் சுற்றி நேர்மைமிக்கவர்கள் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க லாம்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு இப்படி ஒரு பெருமை கிடைக்கும் என்று நான் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் கடுமையாக உழைத்தால் கனவுகளும் நனவாகும்," என்றார் ராய் கிருஷ்ணா.

விருதுகளை வென்ற ராய் கிருஷ்ணாவுக்குத் தற்போது மவுசு அதிகமாகிவிட்டது.

வெல்லிங்டன் குழுவுடனான அவரது ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவரை ஒப்பந்தம் செய்துகொள்ள பல குழுக்கள் முயன்று வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெல்லிங்டன் நகர் தமக்கும் தமது குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான நகரம் என்று குறிப்பிட்ட ராய் கிருஷ்ணா, அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய முடிவை கூடிய விரைவில் அறிவிக்கப்போவதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!