சுடச் சுடச் செய்திகள்

3வது கிண்ணத்திற்கு சிட்டி இலக்கு

லண்டன்: இந்தப் பருவத்தில் ஏற்கெனவே இரு கிண்ணங்களை வென்றுவிட்ட நிலையில் மூன்றா வதாக எஃப்ஏ கிண்ணத்தையும் தனதாக்கிக்கொள்வதில் மான் செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு முனைப்புக் காட்டி வருகிறது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத் தில் சிட்டி, வாட்ஃபர்ட் குழுவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், “வெற்றி என்பது போதை போன்றது. ஒருமுறை வென்றுவிட்டால் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற ஆசை தோன்றும்,” என சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

சிட்டி நிர்வாகியாக கார்டியோலா பொறுப்பேற்ற முதலாண்டில் அந்தக் குழு எந்த ஒரு கிண்ணத்தையும் வெல்லவில்லை. ஆயினும் அடுத்த ஈராண்டுகளில் அக்குழு ஏராள மான சாதனைகளை முறியடித்து, வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்தப் பருவத்தில் லீக் கிண்ணம், இங்கிலிஷ் பிரிமியர் லீக் என ஏற்கெனவே இரு கிண் ணங்களை சிட்டி கைப்பற்றி விட்டது. இந்நிலையில், எஃப்ஏ கிண்ணத்தையும் அது வெல்லும் பட்சத்தில், ஒரே பருவத்தில் மூன்று முக்கிய கிண்ணங்களையும் வென்று, ஆகச் சிறந்த இங்கிலிஷ் காற்பந்துக் குழு எனும் பெருமை யைப் பெற்றுவிடும்.

“எஃப்ஏ கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன். அதற்கு நாங்கள் எவ்வளவு முன்னுரிமை அளித்து வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது,” என்றார் சிட்டி தலைவர் வின்சென்ட் கொம்பனி.

சிட்டியுடனான கொம்பனியின் ஒப்பந்தம் இன்னும் நீட்டிக்கப்படாத நிலையில் இன்றைய ஆட்டமே அக்குழு சார்பில் அவர் பங்கேற்கும் கடைசி ஆட்டமாக இருக்கலாம்.

இதுவரை ஐந்து முறை எஃப்ஏ கிண்ணத்தை சிட்டி வென்றுள்ளது. ஆயினும், 2013ல் நடந்த இறுதிப் போட்டியில் விகன் அத்லெட்டிக் குழுவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் இன்றிரவு நடக்கும் இறுதி ஆட்டத்தை அக்குழு மெத் தனமாக எடுத்துக்கொள்ளாது.

அத்துடன், முக்கியத் தொடர் களில் இதுவரை ஒருமுறைகூட கிண்ணம் வென்றிராத வாட்ஃபர்ட் முதன்முறையாக வெற்றி மகுடம் சூட வேண்டும் என்ற பேரார்வத் துடன் விளையாடும் என்பதால் சிட்டிக்குக் கடும் போட்டி காத்தி ருப்பது நிச்சயம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon