தொடரைக் கைப்பற்றிய பங்ளாதேஷ்

டப்ளின்: அயர்லாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பங்ளாதேஷ் தொடரைக் கைப்பற்றியது.

அயர்லாந்து, வெஸ்ட் இண் டீஸ், பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் = பங்ளாதேஷ்  அணி கள் மோதின. 

முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் 20.1 ஓவர்களில் விக் கெட் இழப்பின்றி 131 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

அப்போது மழை குறுக்கீட்டதால் ஆட்டம் 24 ஓவர்களாக குறைக்கப் பட்டது. மேலும் 23 பந்துகளைச் சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் 21 ஓட்டங்களே அடித்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் சேர்த்தது. 

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பங்ளாதேஷ் அணிக்கு 24 ஓவர்களில் 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

சௌம்ய சர்க்கார் 41 பந்துகளில் 66 ஓட்டங்களும் முஷ்பிகுர் ரஹிம் 22 பந்துகளில் 36 ஓட்டங்களும் சேர்த்தனர். 

மொசாடெக் ஹொசைன் 24 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாச 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பங்ளாதேஷ் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப் பற்றியது.

பங்ளாதேஷ் அணி இந்தத் தொடரைக் கைப்பற்றியதை அடுத்து இம்மாதம் தொடங்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் அது சிறப்பாக செயல்படும் என்ற உற்சாகத்துடன் அதன் ரசிகர்கள் உள்ளனர். 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்