காம்பீர்: ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் காம்பீர் கணித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டி இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 

இதில் நடப்பு வெற்றியாளர் ஆஸ்திரேலியா, போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் வெற்றியாளர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில்,  உலகக் கிண்ணத்தை வெல்ல ஆஸ்தி ரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தவருமான கௌதம் காம்பீர் கணித்து உள்ளார். 

“என்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கிண்ணத்தையும் ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். உலகக் கிண்ணத்தை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணி களில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

“இந்திய அணியைப் பொறுத் தவரை பந்தடிப்பு பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோஹ்லி ஆகியோர் சிறப்பாகப் பந்தடித்தால் இந்திய அணி ஓட்டங்களைக் குவிக்கும். பந்துவீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

“இந்த உலகக் கிண்ணத்தில் போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வோர் ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“ஆஸ்திரேலியாவை அடுத்து உலகக் கிண்ணத்தை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது என்று நான் கூறுவதற்குச் சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசைகளிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள் ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

“2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நான் சதத்தைத் தவற விட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக் கிண்ணத்தை வெல்வதே. எனது பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்,” என்றார் காம்பீர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது முன்னாள் குழுவான ரியால் மட்ரிட்டுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜி குழுவின் வெற்றிக்கு வித்திட்ட அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியா. படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பந்தைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிக்கலஸ் ஓட்டாமெண்டி (இடது), ஷக்தர் டோனட்ஸ்க் குழுவின் ஜூனியர் மொராயஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்