பாகிஸ்தான் அணியில் வஹாப், ஆசிஃப் அலி, அமீருக்கு வாய்ப்பு, ஜுனைத், ஃபாஹிம் நீக்கம்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ் தான் அணியில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

கடந்த மாதம் அணிக்கான முதற்கட்ட பட்டியலை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று இறுதிக்கட்ட பட்டியலை வெளியிட்டது.

அதில் பல முக்கிய மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன. அணி யில் ஆல் ரவுண்டர், ஃபாஹிம் அஸ்ரஃப்பும் பந்துவீச்சாளரான ஜுனைத் கானும் நீக்கப்பட்டுள்­ளனர்.

அவர்களுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர்களான வஹாப் ரியாசும், முகமது அமீரும் சேர்க்கப் பட்டுள்ளனர்.

2017 வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் வஹாப்பும் அமீரும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத் தக்கது.

அதே போல் மத்திய வரிசை பந்தடிப்பாளரான ஆசிப் அலியும் அணியில் இடம்பிடித்துள்ளார். எனவே அபித் அலி நீக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆசிஃப் அலி இரண்டு அரைசதம் எடுத்திருந்தார்.

மேலும் உடல்நலக் குறைவு காரணமாக இங்கிலாந்துக்கு எதி ரான தொடரில் விளையாடாத சாதப் கான் உலகக் கிண்ணத்திற் கான அணியில் தக்க வைக்கப் பட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி