இங்கிலாந்தில் ஒரு வெற்றிகூட பெறமுடியாத பாகிஸ்தான்

லீட்ஸ்: கிரிக்கெட் திருவிழாவான உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 4=0  என இழந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க் கப்படுகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலாந்துக்கான எதிரான கடைசிப் போட்டியில், முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ் தான் 46.5 ஓவர்களில் 297 ஓட் டங்களுக்கு ஆட்டமிழந்து 54 ஓட் டங்கள் வித்தியாசத்தில் தோல் வியைத் தழுவியது.

இந்த 4 ஆட்டங்களிலும் இங் கிலாந்து அணி 300 ஓட்டங் களுக்கு மேல் அடித்துள்ளது. ‘சேஸிங்’ செய்த போட்டிகளிலும் அவ்வணி விரட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அணித் தலைவர் மோர்கன், ரூட் ஆகியோரின் பந்தடிப்பு முக்கிய காரணமாகும்.

அதேபோல பந்துவீச்சில் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ் தானின் சரிவுக்குக் காரணமானார். அதிலும் தனது முதல் இரு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை நிலை குலைய வைத்தார்.

ஆட்டநாயகன் விருது கிறிஸ் வோக்ஸ்க்கும் தொடர் நாயகன் விருது ஜேஸன் ராய்க்கும் வழங்கப் பட்டது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அணித் தலைவர் சர்பிராஸ் அகமது (97), பாபர் ஆசம்(80) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து சொந்த மண்ணில் 37 போட்டிகளில் விளையாடிய இங்கி லாந்து, 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக் கது. தனது சொந்த மண்ணில் அசுரபலத்துடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பன மாக இருக்கும்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

செல்சியின் வளரும் நட்சத்திரமான டேம்மி அப்ரஹாம்  ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.  படம்: ஊடகம்

16 Sep 2019

செல்சி, யுனைடெட், ஸ்பர்ஸ் குழுக்கள் வெற்றி

மேன்சிட்டிக்கு எதிராக கிட்டிய வெற்றியைக் கொண்டாடும் நார்விச் வீரர்கள். இடது படம்: கம்பீரத்துடன் வெற்றி நடை போடும் நார்விச் நிர்வாகி டானியல் ஃபார்க. படங்கள்: ஏஎஃப்பி

16 Sep 2019

எட்டு மாதங்களில் சிட்டிக்கு கிடைத்த முதல் தோல்வி