பந்தடிப்பாளர்களைப் பதம் பார்க்க காத்திருக்கும் ஷமியின் பந்துவீச்சு

மும்பை: உலகக் கிண்ண கிரிக் கெட் தொடரில் எதிரணியின் ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தும் உத்தியுடன் தான் காத்திருப்பதாகக் கூறியுள்ளார் இந்திய பந்துவீச்சா ளர் முகமது ஷமி.

உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி பந்தடிப்பு, பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக இருக்கிறது.

இளமையும் அனுபவமும் கலந்த அணியாக இருப்பதால் உலக கிண்ணத்தை வெல்வதற் கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகி றது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் 17 விக் கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியால், காயம் காரணமாக அடுத்த ஈராண் டுகளுக்கு இந்திய அணியில் சரிவர இடம்பிடிக்கமுடியவில்லை.

ஆனால், சில மாதங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்தார் ஷமி.

இந்நிலையில், வரும் 30ஆம் தொடங்கவுள்ள உலகக் கிண்ணத் தொடரைத் தான் மிகவும் எதிர் பார்த்து காத்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் ஷமி கூறியுள்ளார்.

"உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா வெற்றி பெற, முயற்சி செய்வேன். எனது உடற்தகுதி தற்போது சிறப்பாக இருக்கிறது.

"எடை குறைப்பின் காரணமாக முன்பைவிட வேகமாக பந்துவீச முடிகிறது. தற்போது நான் குறிப் பிட்ட இடத்தில் 'யார்க்கர்' பந்து வீச தயாராகி வருகிறேன்.

"யார்க்கர் பந்தின் மூலம் எதிரணியைக் கட்டாயம் என்னால் கட்டுக்குள் வைக்க முடியும். தொடர்ந்து யார்க்கர் வீசவும் டெத் ஓவர்களில் எதிரணியைக் கட்டுப் படுத்தும் வகையில் பந்து வீசவும் தயாராகி வருகிறேன்.

"ஆகவே இந்தத் தொடரை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மேலும் உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்ல எனது சிறப்பான பந்து வீச்சு உதவும்," என்று நம்பிக்கை யுடன் கூறினார்.

இதற்கிடையே, இந்திய அணி யின் பந்துவீச்சு பலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் லால்சந்த் ராஜ்புத்.

இத்தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாள ரான முகமது ஷமி மட்டுமல்லாமல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர்களான ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், சுழற்பந்து வீச்சாளர்களான யுசுவேந்திர சகல், குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

"உலகக் கிண்ணத் தொடருக் கான இந்திய அணித் தேர்வு சிறப்பாக உள்ளது.

"பந்தடிப்பு, பந்துவீச்சில் திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"குறிப்பாக பந்துவீச்சு பலமாக காட்சியளிக்கிறது. தவிர, இரண்டு 'ஆல்-ரவுண்டர்கள்' இருப்பது கூடுதல் வலு சேர்க்கிறது. ஹர்த்திக் பாண்டியா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப் பார்.

"முதல் வரிசை ஆட்டக்காரர் களில் ‌ஷிகர் தவான், ரோகித் சர்மா, தலைவர் விராத் கோஹ்லி இருப்பது பலம்.

"பின்வரிசையில் டோனி, ரவிந் திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கின் றனர்.

"இம்முறை தேர்வு செய்யப் பட்டுள்ள அணி, கடந்த 2007ல் டி20 உலகக் கிண்ணம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியுடன் இணையாக உள்ளது. ஏனெனில் இரு அணிகளிலும் திறமையான 'ஆல்-ரவுண்டர்கள்' உள்ளனர்," என்றார் ராஜ்புத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!