'எது நடந்தாலும் டோனி வேண்டும்'

'எது நடந்தாலும் டோனி வேண்டும்'

2 mins read

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்துலக போட் டிகளில் யுஸ்வேந்திர சகல் விளை யாடத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாகிவிட்டன.

ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத் திருக்கும் நிலையில், விக்கெட் காப்பாளரும் முன்னாள் தலைவரு மான டோனியைத்தான் இன்றள வும் திடலில் சகல் தமக்கு வழி காட்டியாகக் கருதுகிறார்.

இன்னும் எட்டு நாட்களில் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் சக வீரர் குல்தீப் யாதவுடன் இணைந்து எதிரணிகளை மிரட்டக் காத்தி ருக்கிறார் சகல். 'மிடில் ஓவர்' களில் இவர்கள் இருவரும் விக் கெட்டுகளை வீழ்த்துவது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழும் எனச் சொல்லப்படுகிறது.

"எது நடந்தாலும், களத்தில் டோனி இருக்க வேண்டும். அவர் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்போம். நாங்கள் தவறிழைக்கும் போது அவர் குறுக்கிடுவார். நாங்கள் அணிக்கு வந்த நாள் முதல் இது தொடர்கிறது. நாங்கள் வேறு ஏதேனும் திட்டமிட்டாலும் முதலில் அதைப் பற்றி டோனியிடம் பேசவேண்டும்போல் இருக்கும்," என்றார் சகல்.

திடலில் மட்டுமன்றி, வெளி யிலும் குல்தீப் தமக்கு நல்ல ஆதரவாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட சகல், சிரமமான தரு ணங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து வருகிறோம் என்று சொன்னார்.

"குல்தீப் எனக்குத் தம்பி மாதிரி. மனமுடைந்துபோகும் தரு ணங்களில் யாராவது ஒருவரிடம் பேசவேண்டும் போலிருக்கும். நான் அப்படி நினைப்பது குல்தீப் பைத்தான். தொலைபேசி வழியாக வும் அதிகம் பேசிக்கொள்வோம்," என்றார் இவர்.

இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் பந்தடிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சகல் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் தமது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து தமது பந்துவீச்சு உத்திகள் இருக்கும் எனக் கூறும் இவர், அது குறித்து அணித் தலைவர் விராத் கோஹ்லியுடனும் டோனியுடனும் ஆலோசிப்பதும் முக்கியம் என்றார்.

"டோனி, விராத், ரோகித், தவான் ஆகிய மூத்த பந்தடிப்பாளர் களின் கருத்துகளை அறிய வேண்டியது அவசியம். அந்தச் சூழல்களில் அவர்களின் பந்தடிப்பு அணுகுமுறை எப்படி இருக்கும் எனக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அவர்கள் உலகின் பல் வேறு திடல்களிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஆதலால், அவர்கள் நல்ல யோச னைகளைச் சொல்லக்கூடும்," என்றும் சகல் கூறினார்.

இதுவரை 41 ஒருநாள் போட்டி களில் விளையாடி, 72 விக் கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சகல் விளையாடும் முதலாவது முக்கிய அனைத்துலகத் தொடர் இந்த உலகக் கிண்ணப் போட்டி கள்தான்!