சிட்னி: இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவின் முன் னணி வீரரான ஜஸ்பிரீத் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
"இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக் கிண்ண போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுப் பவர்.
"மேலும் விதவிதமாகப் பந்து வீச்சை மாற்றி வீசுபவர். அவரது பந்துவீசும் முறை கணிக்க முடியாத அளவில் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எந்தப் பந்தடிப்பாளரும் சரியாக கணித்த தாக தெரியவில்லை.
"பும்ராவுடன் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவும் இந்த உலகக் கிண்ணப் போட்டி யில் கவனிக்கப்டும் வீரராக இருப் பார். அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு விளை யாடாவிட்டாலும் அவர் அதி லிருந்து மீண்டு சிறப்பாகச் செயல் படுவார் என்று நம்புகிறேன்.
"அவர் மட்டும் நன்றாக பந்துவீச ஆரம்பித்துவிட்டால் அவர்தான் உலகிலேயே மற்றவர் களைவிட சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார். அதற்கு அவர் வேகத்தைக் கூட்ட வேண்டும். அதேவேளையில் சரியான அளவிலும் பந்துவீச வேண்டும்," என்று ஜெஃப் தாம்சன் தெரி வித்துள்ளார்.

