சீனாவிடம் தோற்று வெளியேறிய இந்தியா

நன்னிங்: சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியில் இந்தியா, சீனாவிடம் 5=0 எனப் படுதோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறி உள்ளது.

ஏற்கெனவே மலேசியாவிடம் 3=2 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது.

மலேசியாவுக்கு எதிரான போட்டியில், ஒருகட்டத்தில் 2=1 என இந்தியா முன்னிலை வகித்தது.

ஆனால் மீண்டு வந்த மலேசியா இந்தியாவைத் தோற் கடித்தது.

இந்நிலையில், போட்டியை ஏற்று நடத்தும் சீனாவை இந்தியா நேற்று முன்தினம் சந்தித்தது.

இந்தியாவின் கலப்பு இரட் டையர் அணியினரான பிரனவ் ஜேரி சோப்ராவும் என். சிக்கி ரெட்டியும் 5-=21, 11=21 எனும் நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தனர்.

காயம் காரணமாக இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக விளையாடிய சமீர் வர்மா 17-=21, 20=22 எனப் போராடித் தோற்றார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சட்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டியும் சிராக் ஷெட்டியும் களமிறங்கினர்.

முதல் செட்டைக் கைப்பற்றிய இவர்கள், அடுத்த இரண்டு செட்களில் தோல்வியைத் தழு வினர்.

21-18, 15-21, 17-21 எனும் செட் கணக்கில் ரன்கிரெட்டியும் ஷெட்டியும் தோற்றனர்.

இதன்மூலம் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் யூ ஃபேயிடம் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்ந்தார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பாவும் என். சிக்கி ரெட்டியும் தோல்வி அடைந்தனர்.

சீனாவுக்கு எதிராக இந்தியா ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெறாமல் வெளியேறியது அதன் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீனா காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!