கோமதியின் தங்கப் பதக்கம் பறிபோகும் அபாயம்

1 mins read
070758ec-dd3f-4116-8d64-a01c511d3709
தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து -

கத்தாரில் கடந்த மாதம் நடந்த ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 30 , தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டதாக ஆய்வகச் சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோமதிக்குத் தற்கா லிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தான் எந்தத் தவறும் செய்ய வில்லை என மறுத் துள்ளார் திருச்சி, முடி கண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி.

"பல்லாண்டுகால உழைப்பின் பயனாக அனைத்துலக அள வில் பதக்கம் வென்றேன். எனது செயல்திறனை மேம்படுத்த ஊக்க மருந்து எடுத்துக்கொள்வது பற்றி கனவில்கூட நான் நினைத்தது இல்லை. நான் என்ன சாப்பிடு கிறேன் என்பதில் எப்போதுமே கவனமாக இருந்து வருகிறேன். இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது," என்றார் கோமதி.

தமது 'ஏ' மாதிரியில் ஊக்க மருந்து இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக 'பி' மாதிரி யைச் சோதனைக்குட் படுத்தச் சொல்லி இவர் கோரிக்கை விடுத்துள் ளார். அதில் தமக்குச் சாதகமான முடிவு வரும் என இவர் திடமாக நம்புகிறார். அதிலும் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் கோமதியின் தங்கப் பதக்கம் பறிக்கப்படும்; அத்துடன், நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்.

இதனிடையே, தம் தங்கையை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்க சதி நடக்கிறதோ என கோமதியின் அண்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.