2022ஆம் ஆண்டில் கத்தாரில் நடக்கவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் 48 குழுக்களைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. முன்மொழிவை முழுமையாகப் பரிசீலித்த பின்னர் இந்த முடிவை எட்டியிருப்பதாக ஃபிஃபா கூறியது. முன்பு திட்டமிட்டிருந்தது போல் அடுத்த ஃபிஃபா போட்டியில் 32 குழுக்கள் மட்டுமே பங்குபெறும் என்று ஃபிஃபா தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கத்தாருக்கும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசு உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதலால் அவற்றின் காற்பந்து குழுக்கள் வரும் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை.
ஃபிஃபா 2022 காற்பந்து; 48 குழுக்களுக்கான முன்மொழிவு நிராகரிப்பு
1 mins read
-

