பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து 

லண்டன்: இங்கிலாந்தில் நடை பெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் பொருதுகின்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.

இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று 'ரவுண்ட் ராபின்' முறையில் போட்டி நடக்க உள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடங்க இன்னும் ஒரே ஒரு வாரம்தான் உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி உலகக் கிண்ணத்தில் விளையாட இங்கிலாந்துக்கு மே 22ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. அதன் பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள் ளன.

இதற்கிடை­யில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி மற்ற 9 அணிகளின் தலைவர் களைச் சந்தித்து கலந்துரையாடி னார்.

அப்போது பாகிஸ்தான் கிரிக்­கெட் அணித் தலைவர் சர்ஃபராஸ் அகமதுடன் கைகுலுக்கினார்.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி, “ஒருநாள் தொடரில் 500 ஓட்­டங்கள் எடுக்கப்போகும் முதல் அணி இங்கிலாந்தாகவே இருக்­ கும்.

"இங்கிலாந்து அணி வீரர்க ளால்தான் இந்தச் சாதனையை நிகழ்த்த முடியும்,” என்று கூறி யுள்ளார்.

மேலும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணி­களும் பந்தடிப்பில் அதிக ஓட்டங்­ களை எடுக்கும் என்று தோன்று கிறது என்று விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

விராத் கோஹ்லி மட்டுமல்ல அனைத்து அணிகளின் தலை வர்களும் இதே பதிலைக் கூறி யுள்ளனர்.

முன்னதாக 1996 ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 398 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்தச் சாதனையை 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் ஒரே போட்டியில் முறியடித்தன.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 434 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தது.

இதையடுத்து, விளை­யாடிய தென்னாப்பிரிக்க அணி 438 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்தி­ரேலியாவின் சாதனையை அதே போட்டியில் முறியடித்தது.

உலகக் கிண்ண ஆட்டம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து அணித் தலைவர்களும் இந்தத் தொடரில் 500 ஓட்டங்களை அணிகள் கடக்கும் என்று பேசி­யிருப்பது, உலகக் கிண்ணத் தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!