லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திரம் பிராயன் லாரா தெரிவித்துள்ளார்.
“உலக கிண்ணத்தை வெல்ல இந்தியா வுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் தலைவர் விராத் கோஹ்லி மனிதரே அல்ல. அவர் ஓட்டங் களைக் குவிக்கும் இயந்திரம். கோஹ்லி ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்தியப் பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாகப் பந்துவீசுகிறார்,” என்றார் லாரா.