நியூசிலாந்திடம் தோற்றது இந்தியா

லண்டன்: உலகக் கிண்ணத் தொட­­ரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்­றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்தத் தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் ஆட்டங்களில் ஒவ்வோர் அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை பொருத வேண்டும்.

வரும் 30ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணத் தொட­ருக்கு முன் அனைத்து அணி­களும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா = நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்தடிப்பைத் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ஓட்டங்களிலும் ‌ஷிகர் தவான் 2 ஓட்டங்களிலும் லோகேஷ் ராகுல் 6 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

தொடர்ந்து இறங்கிய அணித்தலைவர் விராத் கோஹ்லி 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களும், டோனி 17 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 4 ஓட்டமும் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணி 115 ஒட்டத்திற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துத் தத்தளித்தது.

இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்=ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர்.

இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ஓட்டத்திலும், குல்தீப் யாதவ் 19 ஓட்டத்திலும் ஆட்ட­மிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ஓட்டங்களில் ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

ராஸ் டெய்லர் 71 ஓட்டங்களிலும் அணித் தலைவர் வில்லியம்சன் 67 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர்.

இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் பங்ளாதே‌ஷுடன் நாளை பொருதுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் டோனிக்குப் பதிலாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.

இந்நிலையில் விஜய் சங்கர் இந்திய அணியில் ஏன் இடம்பெறவில்லை எனப் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் மருத்துவச் சோத­னை­யில் விஜய் சங்கருக்கு எந்த ஒரு பெரிய காயமோ, எலும்பு முறிவோ ஏற்படவில்லை என்றும் தெரியவருகிறது. இதனால் மே 28 ஆம் தேதி பங்ளாதே‌ஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!