இங்கிலாந்து செல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்து செல்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

1 mins read

புதுடெல்லி: உலகக் கிண்ண பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்­டி­ருக்கும் நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவில் இங்கிலாந்து புறப்பட உள்ளார். இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்தில் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் விளையாடும் நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக விளையாடுவதற்காக அஸ்வின் ஒப்பந்தமாகி உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் வொர் செஸ்டர்ஷைர் அணிக்காக அஸ்வின் 4 போட்டிகளில் விளை­யாடினார். அப்போட்டிகளில் அஸ்வின் 20 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக விளையாடிய அஸ்வின், தற்போது நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக விளையாட விரைவில் இங்கிலாந்துக்குப் புறப்பட உள்ளார்.