கோஹ்லி: பின்வரிசை வீரர்கள்  ஓட்டங்கள் குவிப்பது முக்கியம்

லண்டன்: பன்னிரண்டாவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

உலகக் கிண்ண போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடத் திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று முன்தினம் பொருதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.

பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூறிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, "முக்கிய இங்கிலாந்தின் தட்பவெட்ப நிலையும் ஆடுகளத் தன்மையும் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லை," என்றார்.

தட்பவெப்ப நிலையைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை. எனவேதான் கடுமையான சவால்கள் இருந்தன.

“50 ஓட்டத்தில் 4 விக்கெட் என்ற நிலை 180 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது அருமையான முயற்சியாகும்.

“உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலைப் பந்தடிப்பாளர்கள் ஆடாதபோது பின்கள வீரர்கள் ஓட்டங்களைக் குவிப்பது முக்கியம். இதற்கு அவர்கள் இங்குள்ள ஆடுகளத்தில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது,” என்றார்.

வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும் போது, "வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்," என்றார்.

இந்திய அணி 2வது பயிற்சி ஆட்டத்தில் பங்ளாதேஷை இன்று சந்திக்கிறது. அதே நாளில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.

நேற்று நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ஓட்டங்களில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - பங்ளாதேஷ், தென்னாப்பிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பொருதின.

லண்டனில் நடைபெற்ற நியூசிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!