யூரோப்பா லீக் - இரு நாட்களில் இறுதி ஆட்டம்

யூரோப்பா லீக் - இரு நாட்களில் இறுதி ஆட்டம்

1 mins read
8fafed64-13ff-4780-86dc-f1cdfa5d4594
-

யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை மறுநாள் அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் செல்சியும் ஆர்சனலும் மோதுகின்றன.

கிண்ணம் வெல்ல இரு குழுக்களும் மிகுந்த முனைப்புடன் உள்ளன. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறாவிடில் செல்சியின் நிர்வாகியான மோரிசியோ சாரியின் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று பேசப்படுகிறது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் செல்சி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இருப்பினும், நிர்வாகி சாரி மீது செல்சி ரசிகர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். நடந்த முடிந்த பருவத்தில் முக்கியமான சில ஆட்டங்களில் செல்சி தோற்றது. குறிப்பாக, எஃப்ஏ கிண்ணப் போட்டியில் ஐந்தாவது சுற்றில் சொந்த அரங்கில் மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதி தோல்வியைத் தழுவியது செல்சி. அதற்கு சாரி கையாண்ட உத்திகளே காரணம் என செல்சி யின் ரசிகர்கள் குறைகூறினர். அதுமட்டுமல்லாது, நட்சத்திர வீரர் என் கோலோ கான்டேவை அவர் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆட்டத்தில் செல்சி வெற்றி பெற்று யூரோப்பா லீக் கிண்ணத்தை ஏந்தினால் மட்டுமே தமது பணியை சாரியால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.