டார்பியை வீழ்த்தி மீண்டும் பிரிமியர் லீக்கிற்குள் நுழைந்த ஆஸ்டன் வில்லா

லண்டன்: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு ஆஸ்டன் வில்லா குழு திரும்பியுள்ளது.

இரண்டாவது நிலை லீக் போட்டியில் முதல் இடத்தை நார்விச் சிட்டியும் இரண்டாவது இடத்தை ஷெஃபீல்டு யுனை டெட்டும் பிடித்து அடுத்த பருவத் துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நார்விச் சிட்டி இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாட இருக்கிறது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்குத் தகுதிபெறும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க இரண்டாவது நிலை லீக் போட்டியில் மூன்றாவ தாக வந்த லீட்ஸ் யுனைடெட், நான்காவதாக வந்த வெஸ்ட் பிரோம், ஐந்தாவதாக வந்த ஆஸ்டன் வில்லா, ஆறாவதாக வந்த டார்பி கவுன்டி ஆகிய குழுக்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.

மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்டன் வில்லாவும் டார்பி கவுன்டியும் தகுதி பெற்றன.

வெம்பிளி விளையாட்டரங் கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2=1 எனும் கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா வாகை சூடியது.

ஆஸ்டன் வில்லாவுக்காக அன்வர் அல் காசியும் ஜான் மெக்கின்னும் கோல்களைப் போட் டனர்.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் டார்பி கவுன்டிக்காக டீன் ஸ்மித் கோல் போட்டார். ஆனால் இறுதிவரை டார்பியால் ஆட்டத் தைச் சமன் செய்ய முடியாமல் போக, வில்லா வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தைக் கைப்பற்றிய ஆஸ் டன் வில்லாவுக்கு 170 மில்லியன் பவுண்டு வருமானம் கிடைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!