சாரிக்கு அக்கினிப் பரிட்சை

பாக்கூ: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை அசர்பைஜான் தலைநகர் பாக் கூவில் நடைபெறுகிறது. 

இந்த ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் செல்சியும் ஆர்சனலும் மோது கின்றன.

கிண்ணம் வெல்ல இரு குழுக்களும் மிகுந்த முனைப்புடன் உள்ளன. 

நாளைய இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறாவிடில் செல்சியின் நிர்வாகியான மோரிசியோ சாரி யின் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று பேசப்படுகிறது. 

இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் செல்சி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இருப்பினும், நிர்வாகி சாரி மீது செல்சி ரசிகர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். 

நடந்த முடிந்த பருவத்தில் முக்கியமான சில ஆட்டங்களில் செல்சி தோற்றது. 

குறிப்பாக, எஃப்ஏ கிண்ணப் போட்டியில் ஐந்தாவது சுற்றில் சொந்த அரங்கில் மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதி தோல் வியைத் தழுவியது செல்சி. அதற்கு சாரி கையாண்ட உத்திகளே காரணம் என செல்சி யின் ரசிகர்கள் குறைகூறினர். 

அதுமட்டுமல்லாது, நட்சத்திர வீரர் என்கோலோ கான்டேவை அவர் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றும் கூறப்படுகிறது. 

நாளைய ஆட்டத்தில் செல்சி வெற்றி பெற்று யூரோப்பா லீக் கிண்ணத்தை ஏந்தினால் மட்டுமே தமது வேலையை சாரியால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, யூரோப்பா லீக் கிண்ணத்தை எப்படியும் வெல்ல வேண்டும் என ஆர்சனல் இலக்கு கொண்டுள்ளது. 

இங்கிலிஷ் பிரிமியர் லீக்  பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ஆர்சனல் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற தவறியது.

 நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் அக்குழுவால் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட முடியும்.

ஏற்கெனவே, யூரோப்பா லீக் போட்டியில் நேப்போலி, வெலென் சியா ஆகிய குழுக்களைத் தோற்கடித்து போட்டியிலிருந்து வெளியேற்றி உள்ளது ஆர்சனல். 

இறுதி ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றி பெற்றால் முன்னாள் நிர்வாகி ஆர்சன் வெங்கருக்குப் பிறகு ஆர்சனலின் நிர்வாகியாக இருக்க அனைத்து தகுதிகளையும் பெற்றவர் என்ற பெயர் உனாய் எமெரிக்குக் கிடைத்துவிடும்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon