இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி

சௌத்ஹேம்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

சௌத்ஹேம்டனில் நடை பெற்ற பயிற்சி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் ஆஸ்திரேலியா இலங்கை அணியை எதிர் கொண்டது. 

பூவா தலையாவில்  வென்ற இலங்கை அணித் தலைவர் கருணாரத்னே பந்தடிப்பைத் தேர்வு செய்தார். 

அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்கள் சேர்த்தது. 

திரிமன்னே 56 ஓட்டங்களும் தனஞ்ஜெயா டி சில்வா 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளும் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

இதையடுத்து பந்தடித்த ஆஸ்திரேலியா, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உஸ்மான் கவாஜா 89 ஓட்டங்களும் மேக்ஸ்வெல் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக பெற்ற இரண்டாவது வெற்றி இது. 

முதல் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை, இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

இதனால் இந்த உலகக் கிண்ணத்தில் வெகு விரை விலேயே இலங்கையின் கதை முடிந்துவிடுமோ என்ற அச்சம் அதன் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து தோற்கடித்தது.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. ஜாப்ரா ஆர்சர் (3), ஜோ ரூட் (3) ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 38.4 ஓவர் களில் 160 ஓட்டங்கள் எடுத்து சுருண்டது.

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ் தான் 8 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத் திருந்தது. 

முகம்மது நபி 44 ஓட்டங்களும் தவ்லாட் ஜத்ரான் 20 ஓட்டங் களும் அடிக்க ஆப்கானிஸ்தான் கௌரவமான ஓட்ட எண்ணிக் கையை எட்டியது.

அதன்பின் 161 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. 

தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 89 ஓட்டங்கள் குவிக்க 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon