நாளை தொடங்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

நாளை தொடங்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

1 mins read
e262d50d-2245-4bdb-8cc2-9005a284e36b
-

லண்டன்: மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

அனைத்துலக கிரிக்கெட் மன்றம் சார்பில் நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது. முதல் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகள் 1975, 1979, 1983ஆம் ஆண்டுகளில் 60 ஓவர் அடிப் படையில் நடத்தப்பட்டன. 1987ஆம் ஆண்டு இப்போட்டி 50 ஓவர்கள் அடிப்படையில் மாற்றப்பட்டது. தற்போது இங்கி லாந்தில் நடைபெறவுள்ளது 12வது உலகக் கிண்ணப் போட்டியாகும். ஐந்து முறை வெற்றியாளர்

இதுவரை நடந்து முடிந்த 11 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஐந்து முறை வெற்றியாளர் பட்டம் வென்றது. வெஸ்ட் இன்டீஸ், இந்திய அணிகள் தலா இரண்டு தடவையும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணத்தை வென்றன. கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இதுவரை ஒருமுறைகூடப் பட்டம் வென்றதில்லை. அதேபோல் வலு வான அணிகளான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இன்டீஸ் உள்ளிட்டவை முதன் முறையாகப் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.