கிரிக்கெட் போட்டி: இன்று தொடங்கும் திருவிழா

லண்டன்: மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

அனைத்துலக கிரிக்கெட் மன்றம் சார்பில் நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது. முதல் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகள் 1975, 1979, 1983ஆம் ஆண்டுகளில் 60 ஓவர் அடிப் படையில் நடத்தப்பட்டன.

1987ஆம் ஆண்டு இப்போட்டி 50 ஓவர்கள் அடிப்படையில் மாற்றப்பட்டது. தற்போது இங்கி லாந்தில் நடைபெறவுள்ளது 12வது உலகக் கிண்ணப் போட்டியாகும்.

ஐந்து முறை வெற்றியாளர்

இதுவரை நடந்து முடிந்த 11 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக ஐந்து முறை வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகள் தலா இரண்டு தடவையும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணத்தை வென்றுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இதுவரை ஒருமுறைகூட பட்டம் வென்றதில்லை. அதேபோல் வலு வான அணிகளான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்டவை முதன் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஏற்கெனவே நான்கு முறை நடத்தியுள்ள இங்கிலாந்து தற்போது ஐந்தாவது முறையாக இப்போட்டியை நடத்தவுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தம் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

நடப்பு வெற்றியாளர் ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆப்கானிஸ் தான், பங்ளாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் மொத்தம் 48 ஆட்டங் களில் ஆடவுள்ளன.

2011, 2015ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் மொத்தம் 14 அணிகள் இடம்பெற்றிருந்தன. இது தற்போது 10 அணிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்

‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடைபெறும் இப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். முதல் அரையிறுதி ஆட்டம் ஜூலை 9ஆம் தேதி மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபர்ட் மைதானத்திலும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜூலை 11ஆம் தேதி பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திலும் நடைபெறும். ஜூலை 14ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

பாரம்பரியமாக கிரிக்கெட் ஆடும் எட்டு நாடுகளுடன் பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவையும் மோதவுள்ளன. இரு அணிகளும் எதிரணி களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும் எனக் கருதப்படு கிறது.

வாய்ப்பு பெறும் அணிகள்

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள ஐந்து அணிகள் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகியவை என்று விமர்சகர்கள் கருதுகின் றனர். தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்று இந்தியா. ஆட்டத்தை வெல்லக்கூடிய அதிக வீரர்கள் இருக்கும் அணி இது. ஆனால் இங்கிலாந்து சூழலை எந்த அளவிற்கு இந்தியா தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதுதான் ரசிகர்களின் கேள்வி.

இந்நிலையில், உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங் களைப் பெற்றுத் தருபவர்களாக பந்தடிப்பாளர்கள் திகழ்ந்தாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்களாகப் பந்துவீச்சா ளர்கள் இருப்பர் என இலங்கை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா கூறி உள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக உலகக் கிண்ணத்தை வென்றி டாத வெஸ்ட் இண்டீஸ் இம்முறை பட்டத்தை வென்றால், அது கரீபிய மக்களை ஒருங்கிணைப்ப தாக அமையும் என அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார்.

காயம் காரணமாக தென்னாப் பிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இங்கி லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!