ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை:  விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா முதலிடம்

புதுடெல்லி: ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, பும்ரா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
உலகக் கிண்ண போட்டியை முன்னிட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) வெளி யிட்டுள்ளது.

பந்தடிப்பில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி முதல் நிலையிலும் பந்துவீச்சில் பும்ரா முதல் இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 20வது இடத்தைப் பிடித்து உள்ளார். வேறு யாரும் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை. 
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ஏழாவது இடத்திலும் யசுவேந்திர சாஹல் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

பங்ளாதேஷ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில் காணப்படும் விராத் கோஹ்லி (இடக்கோடி), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்). படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon