சுழற்பந்து வீச்சை சோதித்த இந்தியா

சுழற்பந்து வீச்சை சோதித்த இந்தியா

2 mins read

கார்டிவ்: நியூசிலாந்து மற்றும் பங்ளாதே‌ஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் இந்திய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப்பான முறையில் பரிசோ தித்தது.

நியூசிலாந்து அணிக்கு எதி ரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு குறித்து முன்ன தாக சந்தேகம் எழுந்திருந்தது.

இதனால் சுழற்பந்துவீச்சாளர் களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்ட அணித் தலைவர் விராத் கோஹ்லி முடிவு செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது. இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1), ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் பங்ளாதேஷ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளும் ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், பந்தடிப்பாளர் களுக்குச் சாதகமான ஆடு களத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளா வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களைச் சிறப் பான முறையில் பரிசோதித்து உள்ளது.

களத்தில் ஆடும் பதினொரு வீரர்களில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்துவீச்சாளர், 'ஆல்ரவுண்டர்' கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாப் பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெரியவரும்.