சுடச் சுடச் செய்திகள்

உலகக் கிண்ண பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வெற்றி

கார்டிவ்: பங்ளாதே‌ஷுக்கு எதி ராக நேற்று முன்தினம் நடை பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் 95 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் லோகேஷ் ராகுல், எம்.எஸ்.டோனி இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

பயிற்சி ஆட்டம் என்பதால் இரு அணிகளிலும் தலா 14 வீரர் களை மாற்றி மாற்றி பயன் படுத்திக்கொள்ள அனுமதி அளிக் கப்பட்டது.

பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் அணித் தலைவர் மோர்தசா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து ‌ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். 

மைதானத்தில் நிலவிய மேக மூட்டமான சூழல் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு உதவியது. ‌ஷிகர் தவான் ஓர் ஓட்டத்திலும் ரோகித் சர்மா 19 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 

ஆனால் போகப்போக ஆடு களத்தன்மை பந்தடிப்புக்கு உகந்ததாக மாறியது. அணித் தலைவர் விராத் கோஹ்லி தனது பங்கிற்கு 47 ஓட்டங்கள் (46 பந்துகளில் 5 பவுண்டரி) எடுத்தார். ஆனால் விஜய் சங்கர் (2 ஓட்டங்கள்) சோபிக்கவில்லை.

102 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை (22 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி தடுமாறிய நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும் டோனியும் இணைந்து அணியைத் தூக்கி நிறுத்தினர். 

அவ்வப்போது பந்தை சிக்ச ருக்குப் பறக்கவிட்ட இவர்கள் ஓட்ட எண்ணிக்கையை மளமள வென உயர்த்தினர். அபாரமாக ஆடிய ராகுல் சதம் அடித்தார். 

அணியின் ஓட்ட எண் ணிக்கை 266ஆக உயர்ந்தபோது லோகேஷ் ராகுல் 108 ஓட்டங் களில் (99 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் டோனி அதிரடியில் பின்னியெடுத்தார். அபு ஜெயத்தின் பந்துவீச்சில் அவர் சிக்சர்களை விளாசினார். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்த டோனி 113 ஓட்டங்களில் (78 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்) ஷகிப் அல்ஹசானின் சுழலில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்கள் எடுத்தார். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 359 ஓட்டங் களைக் குவித்தது. விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக் ஏழு ஒட்டங்களுடனும் ரவீந்திர ஜடேஜா 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்திய பந்தடிப்பாளர்களைக் கட்டுப்படுத்த பங்ளாதேஷ் அணி மொத்தம் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. 

அடுத்து, இமாலய இலக்கை நோக்கி ஆடிய பங்ளாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களில் சுருண்டது. 

இதன் மூலம் இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்ளாதேஷ் அணியில் அதிகபட்சமாக விக்கெட் காப்பாளர் முஷ்ஃபிகுர் ரஹிம் 90 ஓட்டங்கள் எடுத்தார். 

இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon