சுடச் சுடச் செய்திகள்

லயன்ஸ் குழுவிற்கு புதிய பயிற்றுவிப்பாளர்

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் (லயன்ஸ்) புதிய பயிற்றுவிப்பாளராக ஜப்பானியரான 44 வயது டட்சுமா யோ‌ஷிடா நியமிக்கப்பட்டுள்ளார்.

லயன்ஸ் குழுவை வழிநடத்தும் முதல் ஜப்பானியரும் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு அக்குழுவிற்கு பயிற்றுவிப்பாளர் பொறுப்பு வகித்த வர்களில் ஆக இளையவருமாக இவர் திகழ்கிறார்.

ஈராண்டு ஒப்பந்தத்தில் நிய மிக்கப்பட்டுள்ள யோ‌ஷிடா, கடந்த ஆண்டு ஏப்ரலில் நிரந்தரப் பயிற்று விப்பாளர் பொறுப்பிலிருந்து வில கிய வீ.சுந்தரமூர்த்தியின் இடத்தை நிரப்புகிறார்.

சுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவர்கள் ஃபாண்டி அகமது, நஸ்ரி நசிர் ஆகியோர் இடைக்காலப் பயிற்று விப்பாளர்களாக பொறுப்பு வகித் தனர்.

சாலமன் தீவுகள் (ஜூன் 8), மியன்மார் (ஜூன் 11) ஆகிய குழுக்களுக்கு எதிராக நடைபெற உள்ள நட்புமுறை ஆட்டங்களில் யோ‌ஷிடாவின் திறன் பரிசோதிக் கப்படும்.

ஜாலான் புசார் விளையாட்ட ரங்கில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் பேசிய யோ‌ஷிடா, “சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப் பட்டிப்பது எனக்குக் கௌர வத்தைத் தருகிறது. 

“சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. பெரிய பொறுப்புகளைக் கொடுத்து உள்ள இந்தப் பதவியை கடப்பாட்டு டனும் பெருமையுடன் வகிப்பேன்,” எனக் கூறினார்.

தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தப் பணி எளிதான ஒன்றல்ல என்பது தமக்குத் தெரியும் என்ற யோ‌ஷிடா, சிங்கப்பூர் காற்பந்துக் குழு புதிய உச்சத்தை எட்டுவதற்கு ஆற்றல் இருப்பதாக தாம் நம்பு வதாகச் சொன்னார். 

ஆட்டக்காரர்களுடனும் ரசிகர் களுடனும் சேர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இரு ஆட்டங்களுக்கு இடைக் காலப் பயிற்றுவிப்பாளராகத் திகழ்ந்த நஸ்ரி, யோ‌ஷிடாவிற்கு உதவியாக இருப்பார் என்று எஃப்ஏஎஸ் தலைவர் லிம் கியா தோங் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் அடுத்த பயிற்றுவிப்பா ளரை நாங்கள் ஆசியாவிற்கு உள்ளேயே தேடினோம். ஜப்பானின் காற்பந்துச் சங்கத் தலைவரிடம் நான் பேசி அவருடைய பரிந்து ரையைக் கேட்டறிந்தேன். அவ ருடைய தொழில்நுட்பப் பிரிவு யோ‌ஷிடாவைப் பரிந்துரைத்தது,” என்றார் திரு லிம்.

ஜப்பானிய லீக்கில் காற்பந்துக் குழுக்கள் சிலவற்றுக்குப் பயிற்று விப்பாளர் பொறுப்பு வகித்து இருந்தாலும் தேசிய காற்பந்துக் குழு ஒன்றை வழிநடத்திய அனுபவம் யோ‌ஷிடாவிற்கு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon