லண்டன்: உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.
பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, முதலில் களம் இறங் கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் களில் 311 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து, வெற்றி பெற 312 ஓட்டங்கள் இலக்குடன் பந்தடிக்கத் தொடங்கிய தென் னாப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 39.5 ஓவர்களில் 207 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் அது இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய பிறகு, தமது அணியின் தலைவர் மோர்கனுடன் சேர்ந்து கொண்டாடுகிறார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (நடுவில்).

