லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 3 மணிக்கு நடை பெறுகிறது.
கிண்ணத்துக்காக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் லிவர் பூலும் ஸ்பர்சும் மோதுகின்றன.
கடந்த பருவத்துக்கான சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கும் லிவர்பூல் தகுதி பெற்றது. ஆனால் அந்த ஆட்டத்தில் 3=1 எனும் கோல் கணக்கில் ரியால் மட்ரிட்டிடம் அது தோற்றது.
அப்போது லிவர்பூலின் கோல் காப்பாளராக இருந்த லோரிஸ் கேரியஸ் இருமுறை செய்த பிழை லிவர்பூலைத் தோல்வியின் பிடியில் சிக்கவைத்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தைப் போக்க இன்றிரவு வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் விளையாட லிவர்பூல் தயாராக உள்ளது.
கடந்த ஆண்டின் தோல்வி தந்த வலி இம்முறை வெற்றிக்கு உந்துதலாக அமையும் என்றார் லிவர்பூலின் தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜல் வேன் டைக்.
"கடந்த ஆண்டின் இறுதி ஆட்டத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதை இம் முறை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகி றேன். கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது மிகுந்த மனவேதனையைத் தந்தது," என்று வேன் டைக் தெரிவித்தார்.
மட்ரிட்டில் உள்ள வாண்டா மெட்ரோபொலிடானோ விளை யாட்டரங்கத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை ஏந்த லிவர்பூல் இலக்கு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத் தில் சௌத்ஹேம்டனிலிருந்து லிவர்பூலுக்குச் சென்ற வேன் டைக், இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவின் ஆட்டக்காரராக முதல் முறையாக கிண்ணம் வெல்ல எண்ணம் கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் லிவர்பூல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
லீக் போட்டியில் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் 2=1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வாகை சூடியது.
ஆனால் பிரிமியர் லீக் வேறு சாம்பியன்ஸ் லீக் வேறு என்பதில் வேன் டைக் தெளிவாக இருக்கி றார்.
"யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஸ்பர்சைவிட நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இறுதி ஆட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்க லாம்," என்றார் வேன் டைக்.
"ஸ்பர்ஸ் வலிமைமிக்க குழு. தற்காப்பு, மத்திய திடல், தாக்குதல் என அனைத்துப் பிரிவுகளிலும் பலம் வாய்ந்த ஆட்டக்காரர்களை அக்குழு கொண்டுள்ளது.
"ஸ்பர்சின் கோல்காப்பாளர், இரண்டு மத்திய தற்காப்பு வீரர்கள், மத்திய திடல் வீரர்கள் ஆகியோர் மிக அருமையாக விளையாடக்கூடியவர்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய தாக்குதல் ஆட்டக்காரர் களும் அதில் உள்ளனர். அத னால் நாங்கள் எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்.
"ஸ்பர்ஸ் வீரர்களும் எங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்பார்ப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. எங்களை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, இறுதி ஆட்டம் சவால் மிக்கதாக அமைவது உறுதி," என்றார் வேன் டைக்.
இந்தப் பருவத்தில் லிவர்பூல் 52 ஆட்டங்களில் களமிறங்கி உள்ளது. அவற்றில் 37 ஆட்டங் களில் அது வெற்றியை சுவைத்தது.
இன்றிரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பர்சை லிவர்பூல் தோற்கடிக்காவிடில் இந்தப் பருவத்தில் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டும் கிண்ணம் ஏதும் வெல்லாத ஏமாற்ற நிலையை அது தழுவ வேண்டிவரும்.
ஏற்கெனவே லீக் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட லிவர்பூல் இன்றைய ஆட்டத்திலும் கிண்ணத் தை நழுவவிட்டுவிடுமோ என்ற படபடப்பு லிவர்பூல் ரசிகர்களின் மனதின் ஓரத்தில் நெருடலாகவே இருக்கிறது.
லிவர்பூலின் கிண்ணக் கனவு நிறைவேறுமா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

