லண்டன்: இம்மாதம் 5ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் அணி அதன் உலகக் கிண்ணப் பயணத்தைத் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அது தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கிறது.
இந்நிலையில், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
"நாங்கள் தொடக்க ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தானுடன் மோதுவதற்கு முன்பாக மூன்று ஆட்டங்கள் இந்தியாவிற்கு உள்ளன. அம்மூன்றையும் வென்றுவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் பிரச்சினையாக இருக்காது.
"மாறாக, முதல் மூன்று ஆட்டங்களில் சிலவற்றில் தோற்றுவிட்டால் பாகிஸ்தானுடன் மோதுவது இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் முதல் மூன்று ஆட்டங்களிலும் நாங்கள் அபார வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவைப் பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது. உலகக் கிண்ணச் சாதனை எங்களையே சேரும்," என்று ரெய்னா தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதன் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

