கவனம் ஈர்த்துள்ள பந்தடிப்பு

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திலும் வேல்ஸ்சிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற் கடித்தது.

பாகிஸ்தானைப் புரட்டிப் போட வெஸ்ட் இண்டீஸ் அணி கையாண்ட மூர்க்கத்தனமான பந்துவீச்சு அணுகு முறை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் இந்த எதிர்பாராத, மூர்க்கத்தனமான பந்துவீச்சு அதிகம் பேசப்படும் என்று இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் சுவான் தெரி வித்துள்ளார்.

“வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இக் காலகட்டத்தில் இத்தகைய உத்தியை யாரும் கையாள்வதில்லை.

“பல ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பந்துவீச்சைப் பார்க்க முடிந்தது. தற்போதைய வீரர்களால் இந்த உத்திகளைச் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே.

“இதன் காரணமாகவே இந்த உலகக் கிண்ணப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் முத்திரை பதிக்க முடியும்.

“வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சைப் பார்ப்பதற்கு சுவாரசி யமாக உள்ளது,” என்றார் சுவான்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச் சாளர்கள், குறிப்பாக ரசலின் ‘பவுன் சர்’கள் பாகிஸ்தான் பந்தடிப் பாளர்களைத் திக்குமுக்காட வைத் தனர். முதல் ஆட்டத்தில் மட்டுமல்லாது, போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் எதிரணிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியால் கதிகலங்க வைக்க முடியுமா என்று ரசலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “நிச்சயமாக முடியும்,” என்று கூறினார்.

“நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்று பலர் மறுந்துவிடுகின்றனர். எனது திறமையைக் குறைத்து மதிப் பிடுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத் தில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்தை வீசி எனது திறமையை நிரூபித்துள்ளேன்,” என்று ரசல் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அதன் அடுத்த ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் வியாழக் கிழமையன்று நடைபெறுகிறது.

மற்றோர் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் நாளை களமிறங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!