‘கிளோப் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை’

மட்ரிட்: கடந்த பருவத்தில் சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துக் கிண் ணத்தைத் தவறவிட்ட லிவர்பூல், இவ்வாண்டு கைப்பற்றியது.

ஆறாவது முறையாக இக் கிண்ணத்தை வென்றுள்ள லிவர் பூல் நேற்று அதிகாலை மட்ரிட்டில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-=-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த 2015ல் கிளோப் நிர்வாகி யாக பதவியேற்ற பிறகு படிப்படி யாக முன்னேற்றம் கண்டு வந்த லிவர்பூல் வென்றுள்ள முதல் முக் கிய கிண்ணமாகும் இது.

இப்பருவத்தில் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் 97 என்ற குழுவின் ஆக அதிக புள்ளிகளைப் பெற்றது லிவர்பூல்.

ஆயினும் தங்களைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்ற மான்செஸ்டர் சிட்டியிடம் பிரிமியர் லீக் பட் டத்தைப் பறிகொடுத்துவிட்ட லிவர்பூலுக்கு இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

ஆட்டம் தொடங்கிய இரண் டாவது நிமிடமே ஒரு கோலைவிட்டு கொடுக்க நேர்ந்தது டோட்டன்ஹம் குழுவிற்கு.

அக்குழுவின் சிசோகோவின் கையில் பந்து பட்டுச் சென்றதற் காக, லிவர்பூலுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதை வெற்றி வாய்ப்பாக மாற்றினார் லிவர்பூலின் நட்சத்திர வீரர் சாலா.

ஒரு கோல் பின்தங்கியதால், ஆட்டம் முழுவதும் கடும் நெருக் கடியில் இருந்தது ஸ்பர்ஸ்.

இருப்பினும் மூன்று முறை பந்தைக் கோல்வலையை நோக்கி அவர்கள் செலுத்தினர்.

சன் ஹியூங் மின், லுகஸ் மோரா, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகிய மூவரின் கோல் போடும் முயற்சிகளை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிசான் தடுத்துவிட் டார்.

இதற்கிடையே, லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் 58வது நிமிடத்தில் ஃபெர்மினோவிற்குப் பதில் மாற்று ஆட்டக்காரராக டிவோக் ஒரிகியை களமிறக்கினார்.

கிளோப்பின் நம்பிக்கையை தகர்த்துவிடாத அவர், 87வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தார்.

முக்கிய இறுதிப் போட்டிகளின் கடைசி ஐந்து ஆட்டங்களில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் திரும்பிய கிளோப், இந்த வெற்றி யால் மகிழ்ச்சியில் திளைத்தார்.

“இன்றைய இரவு என் வாழ் வின் மிகச்சிறந்த ஒன்று. இந்த ஆட்டம் இரு குழுக்களுக்குமே சவாலான ஒன்று.

“வீரர்கள் அனைவரும் தங்க ளது முழு ஆற்றலையும் வெளிப் படுத்தினர்.

“எப்படி, ஏன் வெற்றி பெற்றோம் என விவரிக்க தயாராக இல்லை. நான் வெற்றியை கொண்டாட மட்டுமே விரும்புகிறேன்,” என்றார் கிளோப்.

லிவர்பூல் குழுத் தலைவரும் மத்திய திடல் வீரருமான ஜோர்டன் ஹென்டர்சன், “சிறு வயது முதல் நான் இதைத்தான் கனவு கண் டேன். என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் இது.

“கிளோப் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. நிர்வாகி யாக பொறுப்பேற்றதில் இருந்து குழுவிற்காக அவர் செய்த ஒவ் வொன்றும் சிறப்பானது.

“ஓய்வறையில் வீரர்களுக்குள் மிகச்சிறந்த ஒற்றுமையை அவர் கொண்டு வந்தார். இக்குழுவில் அங்கம் வகிப்பது எனக்குப் பெருமையளிக்கிறது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!