ஊர்வலம் சென்ற லிவர்பூல் ரசிகர்கள்

ஊர்வலம் சென்ற லிவர்பூல் ரசிகர்கள்

1 mins read
a22b2c33-b7c1-494b-844f-90ac0faa8d8d
-
multi-img1 of 2

14 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைப் பெற்ற லிவர்பூல் அணியைக் கௌரவிக்கும் வகையில் அக்குழுவின் ரசிகர்கள் சிவப்பு நிறம் நிறைந்த ஊர்வலத்தை நடத்தினர்.

லிவர்பூல் காற்பந்து குழு விளையாட்டாளர்கள் 'சாம்பியன்ஸ் ஆஃப் யூரோப்' என்ற வார்த்தைகள் கொண்ட பேருந்தில் பயணித்து, தங்களது ரசிகர்களைச் சந்தித்தனர்.

"நாம் அனைவரும் பூரித்துப் போய் உள்ளோம். இந்த நகரத்தின் உணர்வுகள் ஓங்கி உயர்ந்துள்ளன. அனைவரும் ஒன்றுகூடியுள்ளோம்," என்றார் அந்தப் பேருந்தை வரவேற்க வந்த ரசிகர்களில் ஒருவரான திருமதி டினா டர்னர், 51.

நேற்று ஸ்பர்ஸ் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்று 6வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை லிவர்பூல் கைப்பற்றியது.

சென்ற ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் வரை சென்று ரியால் மட்ரிட் குழுவிடம் தோல்வி கண்டது லிவர்பூல். இந்த ஆண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை 1 புள்ளி வித்தியாசத்தில் இழந்தது.

அண்மை ஆண்டுகளில் பல துயரங்களை எதிர்நோக்கிய லிவர்பூல் ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும் முக்கியத்துவம் வகிக்கிறது.