இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா புதிய திட்டம்

நாட்டிங்ஹம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக புதிய திட்டத் துடன் தயாராகி வருவதாக கூறி உள்ளார் தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டு பிளசிஸ்.

உலகக் கிண்ணக் கிரிக் கெட் போட்டியில் இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களி லும் தோல்வியடைந்துள்ளதால், இந்தியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

எனினும் நெகிடி, ஸ்டெயின், ஆம்லா ஆகிய முன்னணி வீரர் களுக்கு ஏற்பட்ட காயம் காரண மாக மேலும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது தென் ஆப்பிரிக்க அணி.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெயின், இந்த உலகக் கிண் ணத்தின் முதல் இரு ஆட்டங் களிலும் விளையாடவில்லை.

இளம் வேகப்பந்துவீச்சாளரான லுங்கி நெகிடி, பங்ளாதே‌ஷுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந் தார். இந்தக் காயம் குணமாக 7 முதல் 10 நாள்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து வில கியுள்ளார் நெகிடி.

அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆர்ச்சர் வீசிய பவுன்சர் தலை கவசத்தில் பட்டதால் காயமடைந்த ஆம்லா, பங்ளாதே‌ஷுக்கு எதி ரான ஆட்டத்தில் விளையாட வில்லை.

எனினும் இந்தியாவுக்கு எதி ரான நாளைய ஆட்டத்தில் ஆம்லா விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே பங்ளாதே‌ஷிடம் தோற்ற பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் டு பிளசிஸ், “மிகவும் ஆக்ரோஷமாக விளையாடவேண்டும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் நெகிடிக்குக் காயம் ஏற்பட்டவுடன் நிலைமை மாறிவிட்டது.

“முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் முதன்மை திட்டம் பலன் கொடுக்கவில்லை. இனி வரும் ஆட்டங்களில் அடுத்தத் திட்டத்தைச் செயல் படுத்தவேண்டும்.

“எங்கள் அணி வீரர்களின் உற்சாகத்தையும் நம்பிக்கையை யும் அதிகப்படுத்த முயற்சிப் பேன்,” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, “இத்தொடரில் இந்தியாவிற்கு இது முதல் போட்டி என்பதை, தென்னாப் பிரிக்கா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜக்குவஸ் கல்லீஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!