தென்னாப்பிரிக்காவை விழுங்கிய பங்ளாதேஷ்

லண்டன்: உலகக் கிண்ண கிரிக் கெட் தொடரை சாதனையோடு தொடங்கியுள்ளது பங்ளாதேஷ்.

நேற்று முன் தினம் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா விற்கு எதிராக வரலாற்று வெற் றியை பதிவு செய்தது பங்ளாதேஷ்.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் குவித் தது. இது உலகக் கிண்ண வர லாற்றில் அந்த அணியின் ஆக அதிக ஓட்டமாகும்.

இது தவிர, உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பங்ளாதேஷ் வெற்றி பெறுவதும் இதுதான் முதல் முறை.

பங்ளாதேஷ் அணியைப் பொறுத்தவரைத் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், சௌமியா சர்க்கார் பொறுமையாக ஆடி நல்ல அடித் தளத்தை அமைத்துக் கொடுத் தார்கள்.

நடுவரிசையில் சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான் இரு வரும் சேர்ந்து 142 ஓட்டங்கள் சேர்த்தது ஆட்டத்தின் திருப்பு முனையாகும்.

இங்கிலாந்து கவுண்டி அணி யில் சஹிப் அல் ஹசன் விளையாடி வந்த அனுபவம் அவருக்கு கை கொடுத்தது.

கடைசி நேநரத்தில் மொசாடக் ஹூசைன், மகமதுல்லா இருவரும் சேர்ந்து கடைசி 8 ஓவர்களில் 80 ஓட்டங்கள் சேர்த்ததும் பங்ளா தே‌ஷின் நிலையை வலுப்படுத்தி யது.

அதே போல், பந்துவீச்சு என்ற வந்த போதும் சஹிப் அல் ஹசன், மெகதி ஹசன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை விழுங்கியது.

331 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு மார்க்ரம், டி காக் நல்ல தொடக்கம் அளித்தார்கள்.

அதிரடியாக ஆடிய டி காக் 23 ஓட்டங்களில் ‘ரன்அவுட்’ ஆனார். பின்னர் இணைந்த அணித் தலை வர் டூ பிளசிஸ் ஓட்ட எண் ணிக்கையை உயர்த்தினர்.

மார்க்ரமைத் தொடர்ந்து, 

டூ பிளசிஸிம் 62  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் 38 ஓட்டங்களில் மில்லரை ஆட்டம் இழக்கச் செய்தார் முஸ்தபிசுர்.

40வது ஓவரில் தென் 

ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்கள் என்ற கணக்கில் தடுமாறியது.

பெலுக்வயோ 8, மோரிஸ் 10 ஓட்டங்களில் ஏமாற்றம் அளிக்க, நம்பிக்கை தந்த டுமினியும் 45 ஓட்டங்களில் நடையைக் கட்டி னார்.

கடைசியில் ரபாடா 13 ஓட்டங் களிலும் தாஹிர் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந் தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ஓட் டங்கள் மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்கா தோற்றது.

ஹசனின் புதிய சாதனை

இந்த ஆட்டத்தில் பங்ளாதேஷ் வீரர் சஹிப் அல் ஹசன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தியபோது, குறைந்த போட்டியில் 250 விக் கெட்டுகளையும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களையும் குவித்து புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானின் ரசாக் 258, அஃப்ரிடி 273, காலிஸ் 296, ஜெயசூர்யா 303 போட்டி களிலும் செய்த இச்சாதனையை சஹிப் அல் ஹசன் 199 போட்டி களிலேயே எட்டியுள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon