காலஞ்சென்ற வெலென்சியா ரசிகருக்குச் சிலை

காலஞ்சென்ற வெலென்சியா ரசிகருக்குச் சிலை

1 mins read
3d03eeac-00e7-410a-930a-c1f176dcfb44
-

குருடான ரசிகர் ஒருவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெலென்சியா காற்பந்து குழ அவருக்குச் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளது.

அவர் வழக்கமாக உட்காரும் இருக்கையில் அவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

'விசன்டே அபாரிசியோ ஏறத்தாழ 50 வயதில் கண்பார்வையை இழந்தாலும், வெலென்சியா காற்பந்து குழுவின் 'மெஸ்டெல்லா' காற்பந்து அரங்கத்தில் நடந்த ஒவ்வோர் ஆட்டத்திற்கும் வந்து விளையாட்டு அனுபவத்தைப் பெற்றார்.

1994ஆம் ஆண்டில் தமது பருவ நுழைவுச்சீட்டை பெற்ற அவர், இறக்கும் வரை அதை வைத்திருந்தார்.

செய்தி, படம்: டெய்லி மெயில்