இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

1 mins read
Google News Preferred Icon

நாட்டிங்ஹம்: உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதி ரான ஆட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஐசிசி எனப்படும் அனைத்துலக கிரிக் கெட் மன்றம் நடவடிக்கை அபரா தம் விதித்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பந்துவீசியது. அப்போது 14வது ஓவரின்போது, இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் ஒரு களக்காப்பைத் தவறவிட்டார்.

அப்போது, திடீரென அவர் மிகவும் கோபமாக, ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். இந்த வார்த்தை மைக்கின் மூலம் நடுவருக்குத் தெளிவாகக் கேட் டது.

இது ஐசிசி ஒழுக்கவிதிகள் படி, தரக்குறைவான வார்த்தை களைப் பயன்படுத்துவது குற்ற மாகும்.

இதே போலக் ஆட்டத்தில் 27வது ஓவரின் போது, நடுவர் அறிவித்த முடிவுக்கு இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்தச் செயலும் ஒழுக்கக் குறைவானதாக இருந்தபடியால் இருவருக்கும் போட்டி ஊதி யத்தில் இருந்து 15 விழுக்காடு அபராதமும் ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். இதனால் அணித் தலைவர் சர்பிராஸ் அகமதுவுக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 20 விழுக்காடு அபராதமும் வீரர்கள் அனைவருக்கும் 10 விழுக்காடு அபராதமும் விதித்து ஐசிசி உத்தரவிட்டது.

கள நடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.