நாட்டிங்ஹம்: இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் தோல்விக்குக் காரணம் மோசமான களக்காப்பு தான் என்று கூறியுள்ளார் அதன் அணித் தலைவர் மோர்கன்.
நாட்டிங்ஹாமில் நேற்று முன் தினம் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங் கிலாந்து அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் முதல் வெற்றியை சுவைத்தது.
இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை வழங்கியதால்தான் பாகிஸ்தான் 348 ஓட்டங்கள் வரை சேர்க்க முடிந்தது. பின்னர் விளை யாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 334 ஓட் டங்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் மட்டும் இங் கிலாந்து அணி வீரர்கள் 13 முறை களக்காப்பில் கோட்டைவிட்டனர். 4 'கேட்சு'களைத் தவறவிட்டனர்,
20 உதரிகள் வரை வழங்கினார் கள். இதுதான் தோல்விக்கு முக் கியக் காரணமாகக் கருதப்படு கிறது.
முகமது ஹபீஸ் 14 ஓட்டங்கள் சேர்த்தபோது கிடைத்த 'கேட்ச்' ஜேஸன் ராய் தவறவிட்டார். இதனால், ஹபிஸ் 84 ஓட்டங்கள் வரை அடித்தார். இதேபோன்று பல தவறுகளை இங்கிலாந்து வீர்ரகள் செய்தார்கள்
தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன், "என்னைப் பொறுத்த வரை பந்துவீச்சு, பந்தடிப்பில் நாங் கள் மோசமாக செயல்பட்டோம் என்று நினைக்கவில்லை.
"ஆனால் களக்காப்பு படுமோச மாக இருந்தது. அதற்கான விலையைத்தான் இந்தப் போட்டி யில் கொடுத்திருக்கிறோம்.
"ஏறக்குறைய 50 முதல் 60 ஓட்டங்களை மோசமான களக்காப் பால் எதிரணிக்கு வழங்கி இருக் கிறோம்.
"பந்துவீச்சில், பந்தடிப்பில்கூட நாம் சிறப்பாகச் செயல்படாமல் முடியாமல் போகலாம்.
"இதுபோன்ற நீண்ட தொடரில் ஒருபோட்டியில் பந்தடிப்பு சிறப்பாக இருக்கும். ஒரு போட்டியில் பந்து வீச்சுச் சிறப்பாக இருக்கும்.
"ஆனால், களக்காப்பில் மட் டும் நாம் தவறு செய்யக்கூடாது. களக்காப்பு மட்டும் எப்போதும் நிலைத்தன்மையுடன் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும்.
"கடினமாக முயற்சி செய்தும் உழைத்தும் களக்காப்பு மோசமாக இருந்ததால் வெற்றியை இழந் தோம்.
"வெற்றிக்கு அருகே சென்று 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறோம். ஆனால், மெத்தனமாக தோற்கவில்லை.
"பாகிஸ்தான் அணியும் சிறப் பாக விளையாடினார்கள். போட்டி யின் கடைசி வரை ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை," என்றார் மோர்கன்.

