அணித் தேர்வில் சவாலை எதிர்கொண்டுள்ள கோஹ்லி

நாட்டிங்ஹம்: உலகக் கிண்ணப் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இந் தியாவுடன் இன்று மோதுகிறது தென்னாப்பிரிக்கா.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டிக்கான பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வது கோஹ்லிக்குப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர்குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் எதிரணி பந்தடிப்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சஹல், ரவீந்திர ஜடேஜா தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டு வர் எனத் தெரிகிறது.

பொதுவாக இரண்டு வேகப் பந்து வீச்சாளர்கள், 2 சுழற் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்=ரவுண்டர் எனக் களம் காண்பது கோஹ்லியின் வியூகம்.

வேகப்பந்துவீச்சுக்குச் சாதக மான இங்கிலாந்து ஆடுகளங்க ளில் இன்று 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் 1 ஆல்=ரவுண்ட ருடன் இறங்குவாரா அல்லது இந் தியாவின் பலமான 2 சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டே களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆல் ரவுண்டர்கள் கேதார் ஜாதவ், விஜய் சங்கர் உள்ளிட்ட இருவரும் காயத்தால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது குணமடைந்து உடல்தகுதி பெற்று உள்ளது சாதகமானது.

பந்துவீச்சு மட்டுமல்லாமல் பந் தடிப்பிலும் நான்காவது இடத்துக் கான வீரரைத் தேர்வு செய்வதும் கோஹ்லிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

கே.எல்.ராகுலே நான்காவது இடத்தில் விளையாடுவார் என்று கருதப்படுகிறது. ஆனாலும் பயிற்சி ஆட்டங்களில் விளையா டாத கேதர் ஜாதவ் வலை பயிற்சி யில் ஈடுபட்டதால் நான்காவது இடத்திற்கான தேர்வும் சவாலாகி உள்ளது.

அல்லது கோஹ்லியே நான் காவது இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறுபுறம் தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியில், முக்கிய வீரர்கள் காய மடைந்துள்ளது அந்த அணிக்கு பேரிழப்பாகும்.

நெகிடி காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது.

பந்தடிப்பிலும் டி காக், டூ பிளெசிஸ், டேவிட் மில்லர் ஆகி யோர் தடுமாறி வருகின்றனர்.

ஆம்லா குணமடைந்து இன் றைய ஆட்டத்தில் பங்கேற்றால் தென்னாப்பிரிக்க அணி தோல்வி யில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது.

உலகக் கிண்ணப் புள்ளி விவரப்படி இதுவரை இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் 4 முறை மோதியுள்ளன.

இதில் தென்னாப்பிரிக்க அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. 4 போட்டிகளில் 3 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியும் ஒருமுறை இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தான் மோதிய முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூ சிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பங்ளாதேஷ் கிரிக் கெட் அணிக்கு எதிரான போட்டி யில் எழுச்சி பெற்று 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

பந்துவீச்சு, பந்தடிப்பு என முழு பலத்துடன் இருக்கும் இந்திய அணியை தொடர் தோல்விக ளால் துவண்டுள்ள தென்னாப் பிரிக்க கிரிக்கெட் அணி சமா ளிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!